Thursday, October 8, 2026

மக்கள் நல திட்டங்களை செய்யுங்கள்; நடிகர் விஜய்க்கு அன்புமணி அறிவுரை


மக்கள் நல திட்டங்களை செய்யுங்கள் என்று நடிகர் விஜய்க்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தொகுதிகளில் பா.ம.க. வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

இதன்போது அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

"தமிழகத்தில் மருத்துவர், நடிகர் என யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். யார் கட்சி தொடங்கினாலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செய்ய வேண்டும். புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல, நடிகர் விஜய் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வர வேணடும்." - என்றார்.


you may also like