- by Editor
- 1 year ago
லெபனானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கை; மேலும் பல கிராமங்களைக் கைப்பற்றும் இஸ்ரேல்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
லெபனானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ள இஸ்ரேல் மேலும் பல கிராமங்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
லெபனான் - பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கின்ற மக்களை வடக்கு நோக்கி நகருமாறு இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பகுதியில் இஸ்ரேலிய துருப்பினரும் ஹெஸ்புல்லா போராளிகளும் நேருக்கு நேர் சண்டையிடுகின்றனர்.
ஹெஸ்புல்லாவின் தாக்குதல்களில் 8 இஸ்ரேலியப் படையினர் கொல்லப்பட்டனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அங்கிருந்து எவரும் தப்பிச் செல்லும் வாய்ப்பு அற்றுப் போய் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பினர் தங்கி இருப்பதாகக் கருதப்படும் கட்டடம் ஒன்றை இலக்கு வைத்தே தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது.
எனினும் அங்கு முக்கியமான மருத்துவ முகாம் ஒன்றும் அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள டாஹியேவும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இது ஹெஸ்புல்லா அமைப்பின் பாதுகாப்பு தளம் என்று தெரிவிக்கப்படுகிறது.