- by Editor
- 2 years ago
கீதா கோபிநாத்: நந்தலால் வீரசிங்க சந்திப்பு!
கீதா கோபிநாத்: நந்தலால் வீரசிங்க சந்திப்பு!
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ,கொழும்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்துள்ளார், இச் சந்திப்பானது இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இலங்கையின் பொருளாதார மீட்சியில் சர்வதேச நாணய நிதியம் வகிக்கும் முக்கிய பங்கினை பாராட்டினார்.
‘இலங்கையின் மீட்சிக்கான பாதை’ மாநாட்டிற்கு முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி கீதா கோபிநாத் மற்றும் அதிகாரிகளை அவர் வரவேற்றார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க, CBSL இன் மூத்த அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இயக்குநர் டாக்டர் கீதா கோபிநாத் மற்றும் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் (IMF) இயக்குநர் டாக்டர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.