- by Editor
- 7 months ago
விண்ணுக்கு அணு ஆயுதத்தை அனுப்பவுள்ளது ரஷ்யா
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
ரஷ்யா விண்வெளிக்கு அணுகுண்டு ஒன்றை அனுப்பவுள்ளதாக அமெரிக்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அணுகுண்டை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளதாகவும், ரஷ்ய பொறியாளர்கள் ஆயுதத்தை உருவாக்கி வருகின்றனர் என்றும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவல் அறியவந்ததை தொடர்ந்து, அமெரிக்க தலைவர்கள் அவசரமாக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அந்த அணுகுண்டானது பூமியின் மீது வீசப்படுவதற்காக அல்ல என்றும் அது விண்வெளியில் இருக்கும் செயற்கை கோள்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு என்றும் அமெரிக்க தரபப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.