- by Editor
- 1 year ago
எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு
-
- by Editor,
- 8 months ago
- in சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடந்த 2022 இல் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து 2022 இம் ஆண்டில் வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கும், 2023 இல் கவிஞர் மு.மேத்தாவுக்கும், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி பின்னணிப் பாடகி சுசீலாவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான கலைத்துறை வித்தகர் விருதுக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமும், 2025 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் ரொக்கப்பரிசாக தலா 10 லட்சம் இந்திய ரூபாவும், நினைவுப் பரிசும் வழங்கப்படும். இதற்கான விருது வழங்கும் விழா முதல்வர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ளது.