- by Editor
- 4 weeks ago
விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்டார் கீர்த்தி சுரேஷ்
-
- by Editor,
- 1 year ago
- in சினிமா செய்திகள்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் அவரது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் அவரின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் மீண்டும் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க போகிறார்.
இந்நிலையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 46வது படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் இவர்கள் கேட்கும் அதே கால்ஷீட் தேதியை விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் நடிப்பதற்காக ஏற்கனவே ஒப்புக் கொண்டுவிட்டாராம். இதனால் சூர்யாவின் 46வது படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
ஏற்கனவே சூர்யா - கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.