Friday, October 9, 2026

விஜய் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜே. விஜய்க்கு, ஈழத் தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை உருவாக்கி, மக்களின் ஆதரவுடன் முதலமைச்சர் பதவியை ஏற்கவுள்ள விஜய்க்கு தனது பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச அரங்கிலும் இந்திய மத்திய அரசாங்கத்திடமும் ஈழத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் நீதிக்கான வலுவான குரலாக விஜய் செயல்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு புதிய ஊக்கமாக அமையும் என்ற நம்பிக்கையையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டார்.

“தொப்புள்கொடி உறவுகள் என்ற உணர்வுடன், ஈழத் தாயகத்தின் முன்னேற்றத்திற்காக உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு எங்களுக்குள்ளது” என அவரது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

you may also like