- by Editor
- 3 weeks ago
விஜயகாந்தின் உடல் நல்லடக்கம்!
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
மறைந்த நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் இறுதி கிரியைகள் இடம்பெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலை தாங்கிய பேழை சென்ற வீதியின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி இருந்ததாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானார்.
அவர் சிகிச்சை பெற்று வந்த மியாட் வைத்தியசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடலம் சில மணிநேரம் சாலிகிராமம் பகுதியிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
எனினும் அங்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து, விஜயகாந்தின் பூதவுடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது.
மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்புவதற்கு ஏதுவாக விசேட போக்குவரத்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அத்துடன் தமிழக காவல்துறையினர் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலம் கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் அலுவலகத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கே இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அரச மரியாதையுடன் அவரது பூதவுடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவருமான விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில், , 'புரட்சித் தலைவர் கெப்டன் விஜயகாந்த்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததுடன் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் என்றும், அவரது பிறந்த திகதி மற்றும் மறைந்த திகதியும் பொறிக்கப்பட்டிருந்தது.