- by Editor
- 2 years ago
மனிதநேயத்திற்கு முன்னால் பேதங்களை விட நீதி, கருணை முக்கியம் - சஜித்
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
மனிதநேயத்திற்கு முன்னால் இனம், மதம் உள்ளிட்ட ஏனைய பேதங்களை விட பரஸ்பர கௌரவம், நீதி, கருணை மற்றும் சகோதரத்துவம் ஆகியவையே மதிக்கத்தக்கவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மை என்பது மக்களைப் பிரிப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, மாறாக அதனை இலங்கையின் பலமாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, ஏனையவர்களின் உரிமைகள் மற்றும் நம்பிக்கைகளை மதித்து, எந்தவொரு மக்கள் பிரிவினரையும் கைவிடாத சமூகத்தை கட்டியெழுப்புவது அனைவரினதும் பொதுப் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய அமைதி, நீதி மற்றும் நல்லிணக்கத்தின் பாதை, இலங்கைக்கு புதிய ஒளியாக அமைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துகள் எனவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.