Saturday, October 10, 2026

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; தி.மு.க. முன்னிலை


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 13 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 13 ஆவது சுற்றின் முடிவில் தி.மு.க. 83 ஆயிரத்து 431 வாக்குகளும், பா.ம.க. 36 ஆயிரத்து 241 வாக்குகளும், நா.த.க. 6 ஆயிரத்து 814 வாக்குகளும் பெற்றுள்ளன. நோட்டாவில் 573 வாக்குகள் பதிவாகியுள்ளது. தி.மு.க. 47 ஆயிரத்து 190 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியும், தொகுதியில் ஆங்காங்கேயும் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்ட மனநிலையில் தி.மு.க. தொண்டர்கள் உள்ளனர். அதேபோல், சென்னையில் தி.மு.க. தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திலும் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல்வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் வைத்தியர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.

இதுவரை 13 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 13 ஆவது சுற்றின் முடிவில் தி.மு.க. 83,431 வாக்குகளும், பா.ம.க. 36,241 வாக்குகளும், நா.த.க. 6,814 வாக்குகளும் பெற்றுள்ளது. நோட்டாவில் 573 வாக்குகள் பதிவாகியுள்ளது. தி.மு.க. 47190 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 

you may also like