Sunday, October 11, 2026

இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 85.97 வீதமும் தாராபுரத்தில் 80.31 வீதம் வாக்குகள் பதிவாகின


தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளிலும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர், அஸ்ஸாம் மாநிலத்தின் நாகோன் மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில், மதுராந்தகத்தில் வாக்குப் பதிவு நிறைவில் 85.97 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 80.31 சதவீத வாக்குகளும் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் 93.22 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 85.97 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. இதேபோல், தாராபுரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் 89.89 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 80.31 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது.

இவ்விரு தொகுதிகளிலும் த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க, இடதுசாரிகள், நா.த.க என ஐந்து முனைப் போட்டி நிலவும் நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமையில் வாக்கு எண்ணிக்கை அதே நாளில் முடிவும் அறிவிக்கப்படும்.


you may also like