Friday, October 9, 2026

வலி. வடக்கு காணி விடுப்பு தொடர்பில் இராணுவக் கட்டளைத் தளபதியுடன் பேச்சு


யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ். இராணுவக் கட்டளைத் தளபதியுடன் யாழ். மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

பலாலி இராணுவத் தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி எம்.சி.பி. விக்கிரமசிங்கவை யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்துப் பேசினர்.

மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியின் வடக்கு மாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன். யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன், மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) கே.ஸ்ரீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா சுதீஸ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது. 

you may also like