Thursday, October 8, 2026

வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார் ஜனாதிபதி


2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றி வருகின்றார்.

இதன்போது பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பது முதல் படியாகும். இந்த ஆண்டு ஏற்றுமதி வருவாய் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

you may also like