Friday, October 9, 2026

வயோதிபப் பெண் வான் மோதி சாவு: கந்தளாயில் துயரம்


வீதியில் வான் மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த வான், திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதியில் வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் அந்த இடத்திலேயே மேற்படி பெண் பலியாகியுள்ளார்.

நேற்றுக் காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய், கித்துழுத்து பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய பெண்ணே இதன்போது உயிரிழந்துள்ளார்.

வான் சாரதி நித்திரை மயக்கத்தில் இருந்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

you may also like