Wednesday, October 7, 2026

வட கொழும்பு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!


வட கொழும்பு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கே. டீ .குருசாமி பழ. புஸ்பநாதன் ஆகியோர் தலைமையில் வட கொழும்பு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதன் கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் 155 ,167,112 இலக்க பேரூந்து வழித்தட பிரச்சினைகள்,வட கொழும்பு வாகன தரிப்பிடம்.

விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் மைதானம் சார் பிரச்சினைகள்,பொது மலசலகூட வசதி,கோவில் திருவிழாக்களுக்கு நந்தி கொடியினை பெற்றுக்கொள்வது ,வியாபார உரிமம் பெற்றுக்கொள்ளுதல் ,வடிகான் பிரச்சினை,வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இதில் பல விடயங்களுக்கு அதிகாரிகளினால் தீர்வுகள் வழங்கப்பட்டதோடு ஒரு சில விடயங்களுக்கு விரைவில் தீர்வை வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது .

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

you may also like