- by Editor
- 5 months ago
அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் மானியம்
-
- by Editor,
- 1 week ago
- in இலங்கை செய்திகள்
அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (28) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிவாரணத் திட்டத்திற்காக 4,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்படி, ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் பொதுமக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை உயர்வினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த நிவாரணத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.