- by Editor
- 1 year ago
வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் முற்றுகை
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வைத்து கைதான ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரில் 5 பேர் தொடர்ந்தும் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.
இதன்போது, தமக்கான நீதியை வலியுறுத்தி ஆலயப் பூசகர் உள்ளிட்ட 5 பேர் நான்காவது நாளாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதன் காரணமாக அவர்களது உடல்நிலை குறித்து இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் மனித உரிமைகள் ஆணைக்குழு எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களிடம் இருந்து முறைப்பாடுகளையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் இன்றும் நாளையும் வவுனியா சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதக் கைதிகளைப் பார்வையிடுவதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட உறவினர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.