- by Editor
- 2 years ago
வட இந்தியப் பெருங்கடலில் 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்
-
- by Editor,
- 3 weeks ago
- in இந்திய செய்திகள்
அடுத்த மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்துக்குள் வட இந்திய பெருங்கடல் பகுதியில் 3 புயல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) எச்சரித்துள்ளது.
வட இந்திய பெருங்கடல் பகுதியில் 2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் மாதம்வரை 3 உயர் தீவிர வெப்பமண்டல புயல்கள் தாக்கக்கூடும் என இஸ்ரோ எச்சரித்துள்ளது.
இதனால், வடகிழக்கு பருவமழை காலமான இக்காலகட்டத்தில் 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயலின் தாக்கம் 83 சதவிகிதம் தீவிரமாக இருக்கும் எனவும் இந்தக் கணிப்புகளை ஆராய்வதற்காக, இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் 40 ஆண்டுகால கடலியல் மற்றும் வளிமண்டலத் தரவுகளை மதிப்பீடு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் தீவிரமானது, கோடைப் பருவமழை ஏமாற்றத்தால் ஏற்பட்ட அசாதாரணமான கொந்தளிப்பான கடல் சூழலை எடுத்துக்காட்டுகிறது.
புயலின் தீவிரத்தால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளில் உள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு உடனடி எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்படக்கூடிய கடற்கரையை ஒட்டி வசிக்கும் மக்களைப் பாதுகாக்கவும், கடல்சார் சொத்துக்களைப் பத்திரப்படுத்தவும், அச்சுறுத்தலுக்கு உள்ளான கடல்சார் மண்டலங்களில் மீன்பிடித் தடைகளை அமுல்படுத்தவும் இந்திய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.