- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (21.08.2024)
வடக்கு மீனவர்களுக்கு நன்கொடையாக வந்த சீன அரிசிப் பொதிகள் மீனவர் வீட்டு உலைகளில் அவிவதற்குப் பதிலாக அதிகம் கடைகளில் விற்பனையாவது தெரிய வருகிறது.
என்ன, ஏது என்று விசாரித்துப் பார்த்தால் அந்த அரிசியை வைத்து சோறாக்க முடிவதில்லை என்று சினக்கின்றார்கள் அடுப்படிகளின் மகாராணிகள். கஞ்சிக்கும், புக்கைக்கும், சோறுக்கும் நடுவில் ஒரு களி வடிவத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பதார்த்தம் உருவாவதாக அவர்கள் எரிச்சலுடன் குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வொன்றும்10 கிலோ கொண்ட இந்த அரிசி மூடைகளையும் வெளியே தாராளமாகக் கடைகளில் காணலாம்.
யாழ்ப்பாண கடைகளில் இப்போது இது கிடைக்கின்றது. ஆரம்பத்தில் ஒவ்வொரு மூடையும் ஆயிரம் ரூபா என விற்பனையான இந்த அரிசி இப்போது மூடை 1300 ரூபா வரை உயர்ந்துள்ளது?
யாழ்ப்பாணக் குடா நாட்டில் மட்டுமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் வரை சென்று கடந்த வாரம் ஒரு பெண்மணி 50 பக்கெட்டுகளை வாங்கி வந்து யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தும் அளவுக்கு சீன அரசி வியாபாரம் களைகட்டி இருக்கின்றது.
சரி, சோறாக்க உதவாத அந்த அரிசியை பிறகு எதற்கு மக்கள் வாங்குகின்றார்கள்?
இந்த அரிசியை மாவாக்கி சாதாரண அரிசி மாவுடன் கலந்து விற்பதால் மாவிற்பனை கொடிகட்டி பறக்கின்றதாம்.....!
***
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலபே பகுதியில் தேடுதல் வேட்டை ஒன்றை முன்னெடுத்த பொலிஸாருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
இரட்டை மாடி கொண்ட கட்டடமொன்றின் கீழ் தட்டில், குளுகுளு ஏசி அறையில், ஒரு கஞ்சாத்
தோட்டம் செழிப்பற்று இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ந்து போனார்கள். அந்த மூடிய கட்டடத்துக்குள் 174 கஞ்சா செடிகள் கம்பீரமாக எழுத்திருக்கின்றன.
அதேசமயம் அங்கு கஞ்சாவை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அங்கு பிடிபட்ட கஞ்சாவின் விற்பனை மதிப்பு 10 கோடி ரூபா எனத் தெரிய வருகின்றது.
23 மற்றும் 48 வயதுடைய இருவர் கேடுகளை ஒட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கடுவள மீது வா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட விருந்தினர்.
முடிய வீட்டில் ஏசி குளிரூட்டி அறையில் கஞ்சா உற்பத்தி ஆச்சரியம்தான்....!