Sunday, October 4, 2026

மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ள தங்கத்தின் விலை - கொழும்பில் இன்றைய நிலவரம்


கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (17) 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 350,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை 382,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் தாக்கமாகவே இலங்கையிலும் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,398 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

you may also like