- by Editor
- 1 month ago
வடமேற்கு மாகாண பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சை திகதிகளில் மாற்றம்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
வடமேற்கு மாகாணத்தில் 6ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை நடைபெறும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (15) முதல் ஜூலை 20ஆம் திகதி வரை நடைபெறவிருந்த இரண்டாம் தவணை பரீட்சைகள், ஜூலை 21ஆம் திகதி முதல் ஜூலை 24ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடலின்படி, 6ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரையிலான இரண்டாம் தவணை பரீட்சைகள் 2026.07.09 முதல் 2026.07.17 வரையிலும், 10ஆம் தரம் மற்றும் 11ஆம் தர மாணவர்களுக்கான பரீட்சைகள் 2026.07.09 முதல் 2026.07.20 வரையிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தன.
எனினும், திட்டமிட்ட காலப்பகுதியில் பரீட்சைகளை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, வடமேற்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் கல்வி அதிகாரிகளின் தீர்மானத்துக்கு அமைய பரீட்சைகளை நான்கு நாட்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட நான்கு நாட்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை இன்று (14) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.