- by Editor
- 1 year ago
வடக்கில் 3,557 ஆசிரியர்கள் பதவிகள் நிரப்பப்படாமல் வெற்றிடமாக உள்ளன
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
வடக்கு மாகாணத்தில் 18 ஆயிரத்து 983 ஆசிரியர்கள் தேவையானபோதும் தற்போது 15 ஆயிரத்து 426 ஆசிரியர்களே பணியில் இருக்கின்றனர் என வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
தகவல் அறியு் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஓர் விண்ணப்பத்திற்கான பதிலிலேயே இதனை கல்வித் திணைக்களம் தெரிவித்துளது.
வடக்கின் 13 கல்வி வலயங்களிலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் 18 ஆயிரத்து 983 பேர். இருந்தபோதும் தற்போது 15 ஆயிரத்து 426 ஆசிரியர்களே பணியில் உள்ளனர். வடக்கில் 3 ஆயிரத்து 557 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை உள்ளது.
யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்கு 2 ஆயிரத்து 455 ஆசிரியர்கள் தேவையாகவுள்ளபோதும் பணியில் 2 ஆயிரத்து 194 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதனால் 261 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. வலிகாமம் கல்வி வலயத்திற்கு 2 ஆயிரத்து 762 ஆசிரியர்கள் தேவையாகவுள்ளபோதும் தற்போது 2 ஆயிரத்து 264 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இங்கே 498 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.
வடமராட்சி கல்வி வலயத்திற்கு 1,735 ஆசிரியர்கள் தேவையாகவுள்ளபோதும் பணியில் 1,402 ஆசிரியர்கள் உள்ளதனால் 333 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகிறது.
தென்மராட்சி கல்வி வலயத்தில் 1,066 ஆசிரியர்களிற்கு 877 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதனால் இங்கே 189 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.
இதேபோன்று தீவக கல்வி வலயத்திற்கு 1,019 ஆசிரியர்களிற்கு 797 ஆசிரியர்களே உள்ளனர். இங்கும் 222 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தைப் பொறுத்தமட்டில் 662 ஆசிரியர்ளிற்கு 565 ஆசிரியர்கள் உள்ளனர். இங்கே 97 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு 1,622 ஆசிரியர்களிற்கு 1,341 ஆசிரியர்களே உள்ளனர் இங்கும் 281 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளனர்.
மன்னார் கல்வி வலயத்திற்கு 1,648 ஆசிரியர்கள் தேவை. இங்கே 1,196 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதனால் இங்கு 452 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகிறது.
மடுக் கல்வி வலயந்தில் 834 ஆசிரியர்களிற்கு 618 பேர் பணியில் இருப்பதனால் இங்கே 216 ஆசிரியர்கள் தேவையாகவுள்ளனர்.
இவ்வாறே வவனியா வடக்கு கல்வி வலயத்திற்கு 1,013 ஆசிரியர்கள் தேவையாகவுள்ளபோதும் பணியில் 777 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 236 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை.
வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 1,805 ஆசிரியர்களிற்காக 1,522 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 283 ஆசிரியர்களிற்கான வெற்றிடம் அங்கு காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு 1,516 ஆசிரியர்கள் தேவையுள்ளபோதும் தற்போது 1,198 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதனால் 318 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை நிலவுகின்றது. துணுக்காய் கல்வி வலயத்தில் 846 ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டியபோதும் தற்போது 675 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இங்கும் 171 ஆசிரியர்களிற்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையில் வடக்கின் 13 கல்வி வலயங்களில் வலிகாமம் கல்வி வலயத்தில் அதிகபட்சமாக 498 ஆசிரியர்களிற்கும், வடமராட்சி கல்வி வலயத்தில் 333 ஆசிரியர்களிற்கும், முல்லைத்தீவில் 318 ஆசிரியர்களிற்கும், தீவக கல்வி வலயத்தில் 222 ஆசிரியர்களிற்கும் பற்றாக்குறை உள்ளது.