- by Editor
- 2 years ago
ருமேஷ் தரங்கவின் பாதுகாப்பையும் அரசாங்கம் ஏற்கும்
ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் சேதமடைந்த ஐந்து ஈட்டிகளுக்குப் பதிலாக புதிய ஈட்டிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் தலையீட்டின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் பாதுகாப்பு தொடர்பான விடயத்திலும் அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நாடு திரும்பியபோது ருமேஷ் தரங்கவின் ஐந்து ஈட்டிகள் சேதமடைந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விமான நிறுவனத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்குப் பதிலாக புதிய ஈட்டிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.