- by Editor
- 5 months ago
கோலியின் நீண்ட கால சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
-
- by Editor,
- 6 months ago
- in விளையாட்டு செய்திகள்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் ரோகித் சர்மா 78 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசனின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 220 ஓட்டங்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 224 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மும்பை வீரர் ரோகித் சர்மா 78 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற விராட் கோலி சாதனையை ரோகித் முறியடித்துள்ளார்.
ரோகித் சர்மா கொல்கத்தாவுக்கு எதிராக இதுவரை 1,161 ஓட்டங்கள் (36 ஆட்டம்) எடுத்துள்ளார். ஆர்சிபி வீரர் விராட் கோலி பஞ்சாப்புக்கு எதிராக 1,159 ஓட்டங்கள் எடுத்திருந்தார் குறிப்பிடத்தக்கது.