- by Editor
- 2 years ago
மக்களின் பசி தீர்க்கவே சுயாதீனமாகப் போட்டி: ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
மக்களின் பசி தீர்க்கவே ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'பெண்கள் எங்கள் பலம்' என்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை, இலங்கையில் ஆண்களுக்குச் சமமாக, பெண்களின் உரிமைகள் வலுவூட்டப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.