- by Editor
- 1 year ago
தங்கத்தின் விலை உயருமா? நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிக்கை
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
நேற்று முன்தினம் (01) பதிவான விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (03) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விலைப்பட்டியலின்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 374,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 344,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை நிலவரம், அமெரிக்க டொலரின் பெறுமதி மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து, எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் ஏற்றம் அல்லது இறக்கம் ஏற்படக்கூடும் என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.