Friday, October 9, 2026

யாழில் மழையால் 1,523 பேர் பாதிப்பு


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக 435 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

சங்கானை பிரதேச செயலகப் பிரிவில் 214 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.


you may also like