Friday, October 9, 2026

மொட்டுக் கட்சியினர் பெயரிடும் வேட்பாளருக்கே கோட்டா ஆதரவு


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெயரிடும் ஜனாதிபதி வேட்பாளருக்கே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவு வழங்குவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம். பி.தெரிவித்தார்.

சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணி ஊடாக வியத்கம உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும் முயற்சியில் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷ இருக்கின்றார் எனத் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் சாகர காரியவசம் மேலும் தெரிவித்ததாவது:-

"கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர். அவ்வாறு உறுப்புரிமை பெற்றதால்தான் அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிந்தது. மொட்டுக் கட்சியின் வேட்பாளருக்கே அவர் ஆதரவு வழங்குவார் என்பது உறுதி. மாறாக ஏனைய அரசியல் சக்திகளுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கமாட்டார். அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையிலும் அவர் ஈடுபடமாட்டார்." - என்றார். 

you may also like