Wednesday, October 7, 2026

தி.மு.க. கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை


தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 38 இடங்களிலும், பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி தலா ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேபோல் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி தொடங்கி எண்ணப்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 தொகுதியிலும், பாஜக கூட்டணி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரியில் முன்னிலை வகிக்கிறார். பாஜக தனித்து எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் இருக்கிறார். பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா சரத்குமார் மிகவும் பின்தங்கியுள்ளார்.

you may also like