Sunday, October 4, 2026

தென்னிலங்கையில் நேற்றும் ஒருவர் சுட்டுக் கொலை!


தென்னிலங்கையில் நேற்றும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

காலி - அம்பலாங்கொடை - இடந்தோட்டையில் நேற்று மாலை இந்தத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் அங்கு உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த ௪௫ வயது நபராவார்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவரவில்லை. சந்தேகநபர்களும் நேற்று இரவு வரை கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, நேற்றுமுன்தினம் காலி - அக்மீமன பகுதியில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதேவேளை, நேற்றுமுன்தினம் கம்பஹா - வெலிவேரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

you may also like