- by Editor
- 2 years ago
மைத்திரியை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அதிரடி உத்தரவு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் நேற்று கருத்துக்களை அறிக்கையிட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னாலுள்ள உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களுக்குக் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவிடுமாயின் மேற்படி தகவல்களைத் தான் இரகசியமாக நீதிபதிகளிடம் வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், மேற்படி கருத்துக்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குக் கடந்த திங்கட்கிழமை சென்று வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்தநிலையில், மைத்திரிபாலவின் மேற்படி கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.