- by Editor
- 3 months ago
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் 36 இலக்குகள் மீது தாக்குதல்!
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து யேமனில் 13 இடங்களில் உள்ள 36 ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அமெரிக்காவின் இராணுவத் தளத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்காவினால் நேற்று முன்தினம் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள 85 இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிராகவே இந்த தாக்குதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என வெள்ளை மாளிகை குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்காவின் பதிலடித் தாக்குதல்கள் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அமெரிக்கா தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 16 பொதுமக்களும் அடங்குவதாக ஈராக் அறிவித்துள்ளது.
ஈரானின் ஆதரவு குழுக்களை குறிவைத்து நேற்று முன்தினம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.