Friday, October 9, 2026

அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்!


அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் இடம்பெறவுள்ளது என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்றும் கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பெயர்ப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

you may also like