Friday, October 9, 2026

வெளியானது “ராமாயணம்“ திரைப்படத்தின் அப்டேட் !


வெளியானது “ராமாயணம்“ திரைப்படத்தின் அப்டேட் !

உலக மக்கள் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில், புகழ் பெற்ற இதிகாசம் திரைப்படமாக உருவாக்கம் பெரும். “ராமாயணம்“ திரைப்படமும் அடங்கும்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கன்னட நடிகர் யாஷ் மற்றும் நட்சத்திர நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் “ராமாயணம்“ படம் உருவாகி வருகின்றது.

இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர்.

நிதேஷ் திவாரி இயக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகின்றது. இதில் முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

முதல் பாகத்தில் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததுள்ள நிலையில், அடிக்கடி இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, தயாரிப்பு நிறுவனம் கிளிம்ப்ஸ் வீடியோவை வருகின்ற 3ஆம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may also like