- by Editor
- 4 months ago
மேற்கு வங்கத்தில் பரபரப்பு - 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுதேர்தல் - அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்
-
- by Editor,
- 5 months ago
- in இந்திய செய்திகள்
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகார்களை அடுத்து, குறிப்பிட்ட தொகுதிகளில் இன்று மறுதேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மார்கரட் பஸ்சிம் (Magrahat Paschim) மற்றும் டயமண்ட் ஹார்பர் (Diamond Harbour) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை (மே 2) மறுதேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, மார்கரட் பஸ்சிம் தொகுதியில் 11 வாக்குச்சாவடிகளிலும், டயமண்ட் ஹார்பர் தொகுதியில் 4 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலின் போது, பாஜக மற்றும் சிபிஎம் வேட்பாளர்களின் பெயர்களுக்கு நேராக EVM இயந்திரங்களில் 'டேப்' (Tape) ஒட்டப்பட்டு அவர்கள் பெயர்கள் மறைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்படும் டயமண்ட் ஹார்பர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஃபால்டா (Falta) பகுதியில் இத்தகைய முறைகேடுகள் நடந்ததாகப் பாஜக குற்றம் சாட்டியது.
வாக்குச்சாவடி ஜாமிங் மற்றும் கள்ள ஓட்டு போன்ற முறைகேடுகளும் நிகழ்ந்ததாகப் புகார்கள் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 58(2)ன் கீழ் அந்த 15 மையங்களில் நடந்த வாக்குப்பதிவைச் செல்லாது என அறிவித்த தேர்தல் ஆணையம், தற்போது மறுதேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளது என indiatoday செய்தி வெளியிட்டுள்ளது.