Monday, October 12, 2026

விமான விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!


பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு பயணித்த சிறிய ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானம் ரியோபிரான்சிகோ விமான நிலையத்திற்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொருங்கியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

you may also like