Saturday, October 10, 2026

மூதூர் குடிசார் ஒன்றியத்தின் துணைக் குழுக்கள் செயலமர்வு


மூதூர் குடிசார் ஒன்றியத்தின் துணைக்குழுக்களுக்கான செயலமர்வு மூதூர் கலாசார மண்டபத்தில் எம்.சீ.எப். இன் அழைப்பாளர் மொஹமட் புஹாரி தலைமையில் நடைபெற்றது.

மூதூர் பிரதேச செயலக பிரிவில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் உருவாக்கப்பட்ட துணைக் குழுக்களுடனான கலந்துரையாடல் மற்றும் திட்டமிடல் என்பன தொடர்பாக நெறிப்படுத்தப்பட்டது.

அத்தோடு ஒன்பது துணைக்குழுக்கள் தமது அறிக்கைகளையும் சமர்ப்பித்ததுடன் எதிர்கால செயற்பாடுகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்தச் செயலமர்வின் விரிவுரையாளராக வலயக் கல்வி பணிப்பாளர் ஜவாத் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

you may also like