- by Editor
- 2 months ago
உலக அரங்கில் தமிழரின் மாபெரும் சாதனை - உலகின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரியாக சுவிஸ் தொழிலதிபர் ஸ்ரீ இராசமாணிக்கம் தேர்வு
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
சுவிட்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற “Best CEO Awards 2026” விருது வழங்கும் விழாவில், உலகின் தலைசிறந்த CEO களில் ஒருவராக தமிழரான திரு. இராசமாணிக்கம் அவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனத் தலைவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்த உயரிய விருது, அவரது சிறந்த தலைமைத்துவம், நேர்மை, தொழில்முறை சாதனைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை பாராட்டி வழங்கப்பட்டது.
உலக வணிக மேடையில் தமிழர்களின் திறமை, உழைப்பு மற்றும் சாதனைகளை உயர்த்திக் காட்டும் இந்த அங்கீகாரம், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளது.
இந்த சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில் உலகத் தலைவர்கள், முன்னணி தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு சர்வதேச வணிக அமைப்புகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விருது பெற்ற பின்னர் திரு. இராசமாணிக்கம் அவர்கள் தெரிவித்ததாவது:
“இந்த அங்கீகாரம் என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல; உலகம் முழுவதும் உழைத்து சாதித்து வரும் தமிழர்களின் வெற்றிக்கான பாராட்டாக நான் இதைப் பார்க்கிறேன்.”
தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ள இந்த மகத்தான சாதனைக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்