Saturday, October 10, 2026

நள்ளிரவு முதல் எகிறியது எரிபொருள் விலை - முழு விபரம் உள்ளே


லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் நிறுவனங்கள் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன.

எனினும், சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல், ஒரு லீற்றர் சுப்பர் டீசலை தொடர்ந்து 600 ரூபாய்க்கே விற்பனை செய்து வருகிறது.

இதற்கிடையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களினதும் விலைகளை உயர்த்த தீர்மானித்திருந்தது.

அதன்படி, ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 410 ரூபாயாக இருந்த விலை 434 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும், ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 25 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதால், ஒரு லீற்றரின் புதிய விலை 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 470 ரூபாயாக இருந்தது.

அதேவேளை, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 392 ரூபாயிலிருந்து 407 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சுப்பர் டீசலின் விலையும் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒரு லீற்றரின் புதிய விலை 478 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அதன் விலை 458 ரூபாயாக காணப்பட்டது.

இதேநேரம், மண்ணெண்ணெயின் விலையும் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின் புதிய விலை 285 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. முன்னதாக அதன் விலை 265 ரூபாயாக இருந்தது.


you may also like