- by Editor
- 2 years ago
கறுப்பு உடையில் எதிர்க்கட்சி!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த வருடம் முதன்முறையாக நாடாளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடியது. அதன்படி, நாடாளுமன்றம் இன்று முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.