Saturday, October 10, 2026

முன்னாள் கட்டார் அமீரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய கட்டார் பயணம்


முன்னாள் கட்டார் அமீரான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (14) மாலை உத்தியோகபூர்வ விஜயமாக கட்டார் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த விஜயத்தின் போது, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், கட்டார் இராச்சியத்தின் உயர்மட்ட தலைவர்களைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ விஜயம், இலங்கைக்கும் கட்டார் இராச்சியத்திற்கும் இடையே நிலவும் நெருக்கமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

you may also like