- by Editor
- 5 months ago
மலையக மக்கள் சஜித்தின் பக்கமே: அடித்துக் கூறுகின்றார் டிலான்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷ க்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் மலையகப் பெருந்தோட்ட மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
அத்துடன், மலையகப் பெருந்தோட்ட மக்கள் சஜித் பக்கமே நிற்கின்றனர் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிரான் பெரேரா, அரசியல் நெருக்கடியின்போது டலஸ் அழகப்பெரும பக்கம் நின்றார். தற்போது அவர், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.