- by Editor
- 3 weeks ago
மருதானை பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி பெண் கொலை: சிறீதரன் எம்.பி. குற்றச்சாட்டு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
கொழும்பு - மருதானை பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இந்த விடயத்துக்கான நீதியை உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைப் பிரஸ்தாபித்தார்.
அதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து பதிலளிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க மானப்பெரும கருத்துத் தெரிவிக்கையில்,
"மருதானை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண் அதிகாலை 4 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவே ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதற்கு அமையவே கொலையா, தற்கொலையா என்ற முடிவுக்கு வர முடியும்.
இருப்பினும் இதுவரையில் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களுக்கு அமைய
மேற்படி பெண் தற்கொலை செய்துள்ளமையே தெரியவந்துள்ளது.
இந்தப் பெண்ணின் மீது போதைப்பொருள் பாவனை குறித்த பிடியாணையுள்ளமையும் குறிப்பிடத்தக்கது." - என்றார்.