Thursday, October 8, 2026

நாமல் ராஜபக்ஷவுக்கு புதிய சிக்கல் - பணச்சலவை விசாரணையில் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை


ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணச்சலவை விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானக் கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளின் தொடர்ச்சியாகவே நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

you may also like