Saturday, October 10, 2026

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது


தமிழகத்தின் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப் பகுதி மாலை 6 மணி வரை நடை​பெறவுள்​ளது. தொடர்ந்து வாக்​கு​கள் எதிர்வரும் 9 ஆம் திகதி எண்​ணப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்பட உள்​ளன.

தமி​ழ​கத்​தில் மது​ராந்​தகம், தாராபுரம் ஆகிய தனித்​தொகு​தி​களில் இடைத்​தேர்​தலுக்​கான அறி​விப்​பாணையை கடந்த செப்​டம்​பர் 7 ஆம் திகதி தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டது.

இதற்​கான வேட்​புமனு தாக்​கல் செப்​டம்​பர் 9 இல் தொடங்கி 16 ஆம் திகதியுடன் முடிவடைந்​தது.

இதையடுத்து இடைத்​தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு இன்​று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் பலரும் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இரு தொகு​தி​கள் முழு​வதும் துணை இராணுவத்​தின் பாது​காப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வரப்​பட்டு பலத்த கண்​காணிப்பு ஏற்​பாடு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. 

you may also like