- by Editor
- 2 years ago
போராட்டக்காரர்கள் - பொலிஸார் முறுகல்
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் போக்கு ஏற்பட்டது.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அத்தோடு, பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி குவிக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.