- by Editor
- 1 month ago
இயக்கச்சியில் தனியார் செகுசு பேருந்து: மோ.சை. மோதி விபத்து; ஒருவர் பலி
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இயக்கச்சி பகுதியில் பயிணிகள் சொகுசு பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மோ.சைக்களில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிக்ள சொகுசு பேருந்து இயக்கச்சி பகுதியில் சென்றுகொண்டிருந்த போது நேற்று (23) வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பரந்தன், கிளிநொச்சியை சேர்ந்த தங்கவேல் - விஜித்தன் (வயது-40) என்ற நபர் தூக்கி வீசப்பட்டதில் தலை பகுதியில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் குறித்த பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமாடைந்துள்ளது.