Saturday, October 10, 2026

போதைப்பொருளுக்கு எதிரான நேற்று யாழ். நகரில் போராட்டம்



போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

"போதைப்பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் நேற்றுப் பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட சர்வ மதப் பேரவையின் ஏற்பாட்டில் மேற்படி போராட்டம் இடம்பெற்றது.

இதில் யாழ் மாவட்ட சர்வமதப் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், செயலாளர் அருட்பணி இ.ராஜ்குமார், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி வி.ஏ.எஸ்.சுபியான் உள்ளிட்ட மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

you may also like