Saturday, October 10, 2026

'பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப 3 வருடங்கள் தேவை'


நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்னும் 3 வருடங்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மற்றும் வரிகளை இல்லாமல் செய்வதாகக் கூறுகின்றனர்.

எனக்கும் வரிகளை இல்லாமல் செய்வதற்கு விருப்பம் உள்ளது. எனினும் அவ்வாறு செய்தால் நாம் 2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துக்கே மீண்டும் சென்றுவிடுவோம்.

எனவே வேறு எவரிடமும் நாட்டை கையளிக்க வேண்டாம், அவ்வாறு செய்வதால் நாடு மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

நாம் இருப்பதைப் பாதுகாத்து இன்னும் 3 வருடங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டு முன்னோக்கிச் செல்ல முடியும் என்றார்.  

you may also like