- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (22.02.2024)
யாழ்ப்பாணத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டிருக்கும் வர்த்தகப் புள்ளியின் குடும்பத்தில் அடுத்த தலைமுறை வாரிசு ஒன்று கொழும்பில் பெருந்தொகை போதைப் பொருளுடன் மாட்டிக் கொண்டமை குறித்து இந்த பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
நாட்டில் போதைப் பொருள் வர்த்தகம், பாவனை மற்றும் பாதாள உலக கோஷ்டிகள் மீதான பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான கையோடு, இந்த விடயம் அரங்கேறியது.
இது குறித்த செய்திகளை முதலில் வெளிப்படுத்தியது இந்தப் பத்திதான். பல ஊடகங்களும் அது குறித்து அடக்கி வாசித்தன. அந்த விடயத்தை அம்பலப்படுத்துவதில் உள்ள ஆபத்துக் குறித்து உணர்ந்து, மௌனம் பேணி, பல தரப்புகள் தங்களைத் தாங்களே திருப்திப்பட்டுக் கொண்டன.
இப்போது அதற்கு அடுத்த கட்டத் தகவல்:-
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பெருந்தொகை போதைப் பொருளுடன் கைதான இந்தப் பிரமுகர் பற்றிய தகவலை முடி மறைத்த பொலிஸ் வட்டாரங்கள், இப்போது ஏதோ ஒரு முறையில் அவர் பிணையில் வெளியே வந்த செய்தியையும் மூடி மறைத்துள்ளனர்.
வெளியே வந்த அவர், தமது குடும்ப ஊடகத்தின் பொங்கல் நிகழ்வில்ஆடிப்பாடி மகிழும் படமும் எங்களுக்குக் கிடைத்தது.
போதைப் பொருள் வர்த்தகத்துக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை என்று தெற்கில் படம் காட்டும் பொலிஸ், இக்கடத்தல்காரை இப்படிக் குறுகிய காலத்தில் பிணையில் - வெளியில் - விட்டமை எங்ஙனம் என்பதும் இன்னும் புரியவில்லை.